சுதந்திர தாகம்


நாம் பிரகடனப்படுத்துகிறோம்!!!
நாம் எல்லா உரிமைகளும் உள்ள மனிதர்களாக மதிக்கப்படவேண்டும் என்று!
அதற்காக நாம் காத்திருக்கப் போவது
இல்லை!


இப்பொழுதே மனிதகுல விடுதலையை வென்றாக வேண்டும்!!

சாத்தியத்திற்குரிய எல்லா வழிகளிலும் சமுக விடுதலையை வென்றாக வேண்டும்.!!


அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்,
உன்னை தாக்க வருபவனை தகற்த்தெறி!,
மரணத்திடம் ஒப்படை!!!



சுதந்திரத்திரம் இல்லாத அமைதி
சாத்தியம் இல்லை!! ஏனென்றால்,
சுதந்திரம் கிடைக்காத வரை
ஒருவராலும் அமைதியாக இருக்க முடியாது!


-மால்கம் X




சட்டங்களில் விடுதலை இல்லை,
சமுக விடுதலை அடையாதவரை” -


-அண்ணல் அம்பேத்கர்


"தலித்துக்கள் இல்லாத
இஸ்லாமிய சமுக விடுதலையும்,
இஸ்லாமியர்கள் இல்லாத
தலித் சமுக விடுதலையும்
சாத்தியமில்லை! "


"இனி நாங்கள்!!!!


நாங்கள் மட்டுமே எஜமானர்கள்!!!


என்று வானத்தின் செவிப்பறை கிழிய பிரகடணம் செய்கிறோம்!!!


எந்த சுரண்டல் சாம்ராஜ்ஜியங்களில் நீங்கள் புரோகிதம் புரிந்தீர்களோ அந்த சாம்ராஜ்ஜியங்கள், பரிவாரங்கள், வேதங்கள், பஜனைகள் எல்லாம் இந்த யுகபிரளயத்தின் கந்தக அலைகளால் சாம்பலாகின்றன....நாங்கள் எழுகின்றோம்!!!!" ---- இன்குலாப்


ஆகவே வேண்டும் சமுக விடுதலைக்கான சுதந்திரம்!!! ....


Tuesday, January 24, 2012

பேராசிரியர் காதர்மொகையதீன் பார்வையில் “குருதியில் நனையும் காலம்”


திருமண விழாவிற்கு மனமக்களை வாழ்த்த வரும் பெரியவர் மனமகனிடன் உனக்கு மனைவியாக வாய்த்தவள் ஒரு அவலட்சணமான பெண் ,அவள் வருகைக்கு பின் உன் எதிர்காலம் இருட்டாகிவிடும் என்றெல்லாம் ஒருவர் தூற்றினால் அந்த பெரியவரைப் பற்றிய நமது பார்வை எப்படி இருக்குமோ அது போலத்தான் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் “ குருதியில் நனையும் காலம் புத்தக வெளியிட்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் மொகையதீன் அவர்களின் பேச்சும் இருந்தது என்று புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற எனது நண்பர் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார்.


ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளினால் அலங்கரித்த அந்த மேடையில் மூத்த அரசியல்வாதியான பேராசிரியர் காதர் மொகையதீன் அவர்கள் தூங்கி வழிந்தாரா? இல்லை ஆழ்ந்த  சிந்தனையில் இருந்தாரா என்று அரங்கில் இருந்தவர்கள் யாரும் கவணிப்பதற்கு தயாராக இல்லை.
ஆனால் அவரின் மேடைப் பேச்சு ஒன்று தான் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது....  
மேடையில் பேசுவதற்கு வந்த பேராசிரியர் அவர்கள் தனக்கு உடன்பாடில்லாத கருத்துக்களின் மீது அழகிய முறையில் விவாதித்திருக்கலாம், ஒருவேளை ஷாநவாஸின் கட்டுரைகளில் எங்கெல்லாம் தங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறதோ அதை பற்றிய மறுப்புகளை அந்த மேடையிலேயே விளக்கியிருக்கலாம். அது புத்தக ஆசிரியருக்கும், பார்வையாளர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும்..ஆனால் அந்த வாய்ப்பை அந்த புத்தகத்தின் ஆசிரியரை காயப்படுத்த மட்டுமே பேராசிரியர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார். Jack of all trades but Master of none என்றும் ஒரு journalist ன் எழுத்துக்களால் சமுகத்திற்கு எந்த மாற்றமும் ஏற்படபோவதுமில்லை என்றும் அவரின் பேச்சின் எல்லா இடங்களில் வெறுப்பை மட்டுமே பதிவு செய்தார் அந்த பண்பாளர்.  
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் இஸ்லாமிய அரசியல் கட்டுரைகளில் சமுதாய தலைமைகளின் மீது சில இடங்களில் காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார். அவையனைத்தும் அவரின் சொந்த கருத்து என்று ஒதுக்கிவிடமுடியாது, அது சமுதாயத்தின் குரலாகத்தான் கருதப்படவேண்டும்,
இளம் வயதில் தனது எழுத்துக்களால் இஸ்லாமிய அரசியலை மாற்று தளத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ் போன்ற வளரும் எழுத்தாளார்களை முறைப்படுத்தி சரியான தளத்தில் இயக்கும் பொறுப்பு சமுதாய தலைவர்களுக்கு உள்ளது.
ஆனால் தனது ஏற்புரையில் பேராசிரியர் அவர்களின் கருத்துக்களை உள்வாங்கியதாக கூறியதுடன்,அவரை கண்ணியப்படுத்தியும் மேடை நாகரீகத்தை அழகிய முறையில் கடைபிடித்தார் ஷாநவாஸ்.
இந்தியாவில் இஸ்லாமியர்களும், தலித் மக்களும் ஒரே மாதிரியான அடக்குமுறைகளுக்கு உள்ளாவதை, கோவையில் இஸ்லாமியர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும், பரமக்குடியில் தலித் மக்களின் மீது நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி தலித் ,இஸ்லாமிய அரசியல் எழுச்சியின் அவசியத்தை வழியுறுத்தினார்.

இஸ்லாமியர்களின் வாழ்வியல் தத்துவங்களில் பரந்த பார்வையில் உலக சகோதரத்தை வழியுறுத்துபவர்களாக இருப்பதால் ஒரு குறுகிய பார்வைக்குள் சுருங்குவதில் உள்ள சிரமங்களை கூறினார். இது அவரின் அரசியல் பக்குவத்தையும் முதிர்ச்சியையும் காட்டியது.
ஆனால்,தலித் இஸ்லாமியர்களின் கூட்டமைப்பின் கட்டாயத்தை பொது நீரோட்ட அரசியல்வாதிகள் உணரும் இந்த நேரத்தில் அதற்கு மறைமுக கருத்தினை பதிவு செய்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பேராசிரியர் காதர் மொகைதின் அவர்கள். 
இஸ்லாமியர்கள் தலித்துகளை மட்டும் ஆதரிப்பதும், மற்ற சமுக மக்களை புரக்கணிக்கும் நிலைப்பாடு என்பது சாத்தியமில்லாத காரியம் என்று கூறினார். வணிக சமுகமாக இருக்கும் இஸ்லாமியர்கள் பிற சாதிய இந்துக்களை சார்ந்து இருப்பதால் தலித் மக்களுடன் முழமையாக இனைந்து செயல்பட முடியாததின் சாத்தியத்தை கூறியதில் சிறிதும் நியாயம் இருப்பதாக கூறமுடியாது.
இங்கு தலித்-இஸ்லாமிய ஒருங்கினைப்பு என்பது பிறசாதிய இந்துக்களுக்கு எதிரானது என்ற பேராசிரியரின் புரிதல் ஏற்புடையதாக இல்லை.
தலித்துகளும்,இஸ்லாமியர்களும் விரும்புவது சாதிய மறுப்பினை, தலித்,இஸ்லாமிய ஒருங்கினைந்த அரசியல் எழுச்சி என்பது இந்த இரண்டு ஒடுக்கப்பட்ட சமுகத்தின் சமுக,அரசியல் பாதுகாப்பிற்கான செயல்பாடுகள் ஆகும். இங்கு சாதிய இந்து எதிர்ப்பு நிலை என்பது எங்கு வந்தது.?
யாருக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் நிற்க வேண்டும் என்ற கேள்விக்கு ,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் இஸ்லாமியர்களின் கடமை என வழியுறுத்தும் இஸ்லாத்தின் கருத்துக்களை உள்வாங்கிய பேராசிரியர் அவர்களா இப்படி பேசுவது?
தலித்,இஸ்லாமிய சமுகங்களின் ஒற்றுமையால் தான் இன்று பெரும்பான்மையான மதக்கலவரங்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமை பொதுவாக சாதி வெறியர்களுக்கு தான் எரிச்சலை தரும். அவர்களின ஒற்றை திட்டமே தலித்,இஸ்லாமிய சமுகங்களுக்கிடையே எந்த இனக்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது மட்டும் தான்.
 இன் நிலையில்,இரண்டு ஒடுக்கப்பட்ட சமுகங்களும் ஒருங்கினைந்து அரசியல் எழுச்சி காணும் போராட்டத்தில் சந்திக்க வேண்டிய பொது பிரச்சனைகளை எப்படி கலைவது? இன்னும் முனைப்புடன் போராடுவது எப்படி? என்று ஒரு அனுபவ முதிர்ச்சி கொண்ட அரசியல் தலைவர் பேசுவார் என எதிர்ப்பார்த்திருந்த எனக்கு பேராசிரியரின் பேச்சு மிகவும் விரக்தியை தான் தந்தது. சில இசைகள் நமக்கு துள்ளலை தரும், சில இசைகள் காற்றில் மிதக்க வைக்கும் இன்னும் சில இசைகள் நம்மை தாலாட்டி தூங்க வைத்துவிடும்,. பேராசிரியரின் பேச்சு மிகவும் சோர்வடைய செய்தது. கூர்மையான வாள் கொண்டு பெரும் பாறையை வெட்டியது போலத்தான், வீரியத்துடன் இருக்கும் தொண்டர்களையும் மழுங்கடிக்க செய்கிறது தலைவர்களின் செயல்பாடுகள். வந்திருந்த பெரும்பான்மையான அழைப்பாளர்கள் கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களை மேற்கோள் காட்டாமல் பேசவில்லை. ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கின் தலைவர் அவர்கள் மருந்துக்கு கூட தவறியும் காயிதே மில்லத் சாஹிப் அவர்களின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை என்பது மிகவும் வருந்ததக்கது.
கூட்டத்திற்கு வந்திருந்த நண்பர், பள்ளிவாசல் ஒன்றின் ஜமாத் தலைவராக இருக்கிறார், பேராசிரியர் அவர்களின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் மேடையில் அவருக்கு சால்வை போர்த்துவதற்கு வந்திருந்தார். பேராசிரியரின் பேச்சில் விரக்தியடைந்த நண்பர் அதே புத்தக வெளியீட்டு மேடையிலேயே சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு அந்த சால்வையை அணிவித்து விடுதலை சிறுத்தைகளின் கட்சியில் இனைந்து கொண்டார். இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் தொலை நோக்கு பார்வையுடைய தலைவர்களே தேவைப்படுகிறார்கள்.

குருதியில் நனையும் காலம் புத்தகத்தின் எல்லா கட்டுரைகளும் இஸ்லாமியர்களின் உள்ள குமுறல்களையும், அவர்களின் நியாயமான கேள்விகளையும் உள்ளடக்கியுள்ளது. விமர்சனங்கள் அனைத்தும் சமுகத்தின் கேள்விகளாக மட்டும் தான் பார்க்கபட வேண்டும்.
இந்த இளம் சமுதாயத்தின் கேள்விகளையும், விமர்சனங்களை சந்திப்பதற்கு தலைவர்கள் தயாராக இல்லாத போது அவர்கள் அரசியலை விட்டு விட்டு ,தனது எஞ்சிய காலத்தை அமைதியாக கழிப்பது மட்டும் தான் சமுதாயத்திற்கு செய்யும் பெரும் நன்மையான காரியமாகும்.

0 comments: