சுதந்திர தாகம்


நாம் பிரகடனப்படுத்துகிறோம்!!!
நாம் எல்லா உரிமைகளும் உள்ள மனிதர்களாக மதிக்கப்படவேண்டும் என்று!
அதற்காக நாம் காத்திருக்கப் போவது
இல்லை!


இப்பொழுதே மனிதகுல விடுதலையை வென்றாக வேண்டும்!!

சாத்தியத்திற்குரிய எல்லா வழிகளிலும் சமுக விடுதலையை வென்றாக வேண்டும்.!!


அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்,
உன்னை தாக்க வருபவனை தகற்த்தெறி!,
மரணத்திடம் ஒப்படை!!!



சுதந்திரத்திரம் இல்லாத அமைதி
சாத்தியம் இல்லை!! ஏனென்றால்,
சுதந்திரம் கிடைக்காத வரை
ஒருவராலும் அமைதியாக இருக்க முடியாது!


-மால்கம் X




சட்டங்களில் விடுதலை இல்லை,
சமுக விடுதலை அடையாதவரை” -


-அண்ணல் அம்பேத்கர்


"தலித்துக்கள் இல்லாத
இஸ்லாமிய சமுக விடுதலையும்,
இஸ்லாமியர்கள் இல்லாத
தலித் சமுக விடுதலையும்
சாத்தியமில்லை! "


"இனி நாங்கள்!!!!


நாங்கள் மட்டுமே எஜமானர்கள்!!!


என்று வானத்தின் செவிப்பறை கிழிய பிரகடணம் செய்கிறோம்!!!


எந்த சுரண்டல் சாம்ராஜ்ஜியங்களில் நீங்கள் புரோகிதம் புரிந்தீர்களோ அந்த சாம்ராஜ்ஜியங்கள், பரிவாரங்கள், வேதங்கள், பஜனைகள் எல்லாம் இந்த யுகபிரளயத்தின் கந்தக அலைகளால் சாம்பலாகின்றன....நாங்கள் எழுகின்றோம்!!!!" ---- இன்குலாப்


ஆகவே வேண்டும் சமுக விடுதலைக்கான சுதந்திரம்!!! ....


Friday, August 19, 2011

தூக்கு கயிற்றின் கொடூர பசிக்கு சில இரைகள்


மரணத்தின் வாசலில் நின்று கொண்டு உயிர் பிழைக்க வழி தேடும் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ள பேரறிவாளன்,முருகன் மற்றும் சாந்தனின் கருணை கோரிக்கைகள் இந்திய ஜனாதிபதி அவர்களால் நிராகரிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூடிய விரைவில் தூக்கிலடப்பட்டு படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் வெளி வந்த செய்திகள் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்களின் மனங்களை அதிச்சியடைய செய்தது.
எப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவன் ஆதிக்க வெறிகளின் காலடியை விட்டு திமிறுகிறானோ அப்பொழுதெல்லாம் அவன் தீவிரவாதியாகின்றான், சாட்சிகள் தாயரிக்கப்பட்டு வேட்டை பிராணிகளாக்கப்படுகின்றான்.
20 ஆண்டுகள் இளமை தொலைத்து, உலகம் இருண்ட கம்பி சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு, மீதமிருக்கும் அவர்களின் உயிரையும் பறிப்பதற்காக தேசியம் காப்பவர்கள் நீண்ட திட்டங்களை தீட்டியபடி உள்ளனர்
கொலை செய்யப்படுவதன் மூலம் தான் தேசியம் காக்கப்படும் என்று  நம்புகிறது அதிகார வர்க்கம்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி உடல் நலம் இல்லாமல் புற்று நோய் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது என்பது ஏதாவது ஒரு உள் நோக்கம் கொண்டதாக இருக்கும். குற்றவாளிகளை கொலை செய்வதன் மூலம் யாரையோ ஆறுதல் படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. அல்லது ஒசாமா பின் லேடனை கொன்று அமெரிக்க மக்களிடம் தன் இழந்த செல்வாக்கை நிலை நாட்டிய ஒபாமாவை போல காங்கிரஸ் அரசாங்கத்தின் வரலாறு காணாத ஊழலை மறைத்து தேசப்பற்றாளர்கள் என்ற பெயரை வாங்குவதற்கான தந்திரத்தில் இம்மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்ற சதி இருப்பதாகவும் தோன்றுகிறது.

இந்த அறிவிப்பு வெளிவந்த உடனே தமிழ் உணர்வாளர்கள் மாநிலம் முழுவதும் பரவலான  தொடர் போராட்டங்களையும், கண்டன ஆர்பாட்டங்களையும் நடத்திக் கொண்டிருப்பது ஓரளவிற்கு ஆறுதளான செய்தியாக உள்ளது.

பேரறிவாளன், முருகன், மற்றும் சாந்தன் இவர்களை போலவே ஜனாதிபதியால் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட, எந்த ஒரு அரசியல் அமைப்புகளின் வெளிச்சம் படாதா ஒரு உயிர் முரட்டு தூக்கு கயிற்றின் கொடுர பசிக்கு இரையாகும் நிலையில் உள்ளது.
வட இந்திய அரசியல்வாதிகளில் யாருக்கும் அந்த உயிரினை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லை, ஏனென்றால் அவர் ஒரு காஷ்மீரி, மேலும் அவர் ஒரு முஸ்லீம் அதனால் அவர் தீவிரவாதி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் முகம்மத் அஃப்சல் குரு.
அஃப்சல் குருவிற்கு எதிராக நேரசி சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளும் உச்ச நீதி மன்றம் .ஆனாலும் இந்திய குடிமக்களின் மன உணர்வுகளை தணிப்பதற்கு அஃப்சல் குரு தூக்கிலடப்பட வேண்டும் என்று வேடிக்கையான தீர்ப்பு ஒன்றினை வழங்குகிறது.....
பாபர் மசூதி நிலம் சம்பந்தமான அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பும் வரலாற்று ஆதாரங்கள் இல்லாத போதும், பெரும்பான்மையான மக்களின் மன உணர்வுகளை மதித்து அங்கு தான் ராமன் பிறந்தார் என தீர்ப்பு கூறியது.....ஆக பெரும்பான்மையினரின் உணர்வுகளை தனிப்பதற்காக இங்கு சிறுபான்மையினரின் உயிர்களும், உரிமைகளும் பறிக்கப்படும் அபாயம் உள்ளது.
புலனாய்வு நிறுவனங்களால் பொய்யான சாட்சியங்களை உருவாக்கி, சித்திரவதைகளால் துண்புறுத்தப்பட்டு, திட்டமிட்டு குற்றம்சாட்டப்பட்டு பின் அதன் அடிப்படையில் பத்திரிக்கைகளில் செய்திகளை பரப்புரை செய்து அஃப்சல் குரு ஒரு தீவிரவாதியாக உறுவாக்கப்படுகிறார்.
பின் தேச நலன் காக்க அவருக்கு மரண தண்டனை வேண்டும் என நீதி மன்றங்களும், இந்துத்துவ ஃபாசிஸ்டுகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.
தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கு எதிராக தன்னை தானே காத்துக் கொள்வதற்கும் கூட அனுமதிக்கப்படாமல் சககுடிமகன் ஒருவனை தூக்கில் தொங்கவிடுவதன் மூலம் தான் இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சி திருப்தியடையும் என இந்த நீதி மன்றங்கள் நம்புகின்றன.
1)       அஃப்சல் குரு மனம் திருந்தி அரசிடம் சரணடைந்த முன்னால் போராளியாவர், அவர் காஷ்மீர் சிறப்பு காவல் படையினரால் (STF) பாரளுமன்ற துப்பாக்கி சூட்டு வழக்கில் சதி செய்து சேர்க்கப்படுகிறார்.
2)        பொதுவாக இந்த சிறப்பு படைகளிடம் சிக்கிய எந்த இளைஞர்களும் உயிருடன் திரும்புவதில்லை என்று காஷ்மீரீகள் நம்புகின்றனர். இதுவரை 6000 இளைஞர்கள் இந்த சிறப்பு படையினரால் விசாரிக்க அழைத்து செல்லப்பட்டு இது வரை வீடு திரும்பவில்லை. அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதான் நம்பபடுகிறது.  முன்னால் போராளிகளின் குழந்தைகள் 8000க்கும் மேற்பட்டவர்கள் யாருடைய பராமரிப்பும் இன்றி அனாதைகளாய் வாழ்கின்றனர். இன்னும் காஷ்மீரத்து பெண்கள் பலர் தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கணவனை தொலைத்துவிட்டு அரை விதவைகளாக வாழ்கின்றனர். கடைசியில் அஃப்சல் ,சிறப்பு காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளிலிருந்து தன் குடும்பத்தினரை பாதுகாத்திடும் நோக்கில் காவல்துறையினரின் மிரட்டல்களுக்கு பணிந்து குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டார்

3)       போலிஸ் விசாரனையின் போது (interrogation) வழக்கறிஞரின் உதவியை பெறுவதற்கு அஃபசல் அனுமதிக்கப்படவில்லை.
4)       அரசு வழக்கறிஞராக வாதாட வந்தவரே அஃப்சலுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என வாதிட்டார். மேலும் அஃப்சல் தூங்கில் தொங்கி சாவதற்கு விரும்பவில்லை அதனால் விச ஊசி ஏற்ற்பட்டு சாவதற்கு விரும்புகிறார் என்று அஃப்சல் வாக்குமூலம் கொடுத்தாக அவருக்கு தெரியாமலே ஊடகங்களில் வெளியிடபட்டது

5)        குடும்பத்தினரை காவல் துறையின் பிடியில் வைத்துக் கொண்டு அஃபசலை பொய் சாட்சி கூற நிர்பந்தித்தும், தான் மரணத்தருவாயில் இருந்த போதும், சிறப்பு காவல் துறையின் பெரும் எச்சரிக்கைகளயும் மீறி நீதிமன்றத்தில் அஃப்சல், ஆஜ்தக் நிருபரின் ஒளிப்பட சாட்சிகளை வைத்து பேரா. ஜீலானி அவர்களின் விடுதலைக்கு துனை நின்றார். அதன் மூலம் பேரா. ஜீலானி குற்றமற்றவர் என்று உறுதியாகி ம்ரனதண்டனையிலிருந்து காப்பற்றப்பட்டார்.


6)       காவல்துறை சார்பாக சுமார் 80 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அஃப்சலுக்கு ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டவில்லை.

7)       இராம்ஜெத்மலானி இவர் வழக்கில் வாதிட விரும்பிய போது இவரின் மும்பை இல்லம் சிவசேனை குண்டர்களால் நொறுக்கப்பட்டது, அதனால் அவர் வாதிடாமல் வெளியேறிவிட்டார்.

8)       பயங்கரவாத அமைப்புகளுடனோ அல்லது கும்பல்களுடனோ தொடர்பு என்பது குறித்த பொடாவினை உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட மூன்று நீதிமன்றங்களுமே நிராகரித்தது என்பது குறிப்பிடதக்கது.

9)       பாரளுமன்ற குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளிகளான மசூத் அசார்,காஸிபாபா, தாரிக் அகமது ஆகியவர்களை புலனாய்வுதுறை இந்த வழக்கில் சேர்க்கபடவில்லை ஏனென்றால் துப்பாக்கி சூட்டின் போது மூவருமே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.


பலியிடப்படுவதற்காகவே வளர்க்கப்படும் சிறை மிருகமாக சிறுபான்மை மக்களை ஃபாசிஸ்டு அரசுகள்  நடத்துகின்றனர்.
அப்துல் நாசர் மதானியிலிருந்து அஃப்சல் குரு வரையிலும் இன்னும் கோவை சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லீம்கள் வரையிலும் இது தொடர்கிறது. சிறைச்சாலைகளில் மட்டுமே இஸ்லாமியர்களுக்கு தனது மக்கள் சதவீதத்திற்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நடு நிலையாளர்கள் என்று சொல்லுக் கொள்பவர்கள் கூட இஸ்லாமிய கைதிகளின் விசயத்தில் ஒரு தலைபட்சமாகத்தான் நடந்து கொள்கின்றனர். பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சரப்ஜீத் சிங்கிற்கு மரனதண்டனை விதிக்கப்பட கூடாது என்று அவர் காப்பாற்றபட வேண்டும் என குரல் எழுப்பியவர்கள், இந்தியா-பாகிஸ்தான் அரசு உறவுகள் மூலம் அவரின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்கள் கூட அஃப்சல் குரு விசயத்தில் மட்டும் அவர் கண்டிப்பாக தூக்கிலடப்பட வேண்டும் என்று வழியுறுத்துவது முரணாகும்.










மனித உயிரை விரும்பிய போது எடுத்துக் கொள்ளக் கூடிய  நிறுவனமயப்பட்ட அரசுரிமைதான் மனித ஆளுமையில் கண்ணியத்திற்கு இழைக்கக் கூடிய  மாபெரும் இழிவாக இருக்க முடியும்.  என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி.ஆர்தர் ஜெ.கோல்ட்பெர்க்  அவர்கள் கூறியது போல,
தூக்கு தண்டனை என்பது சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு எதிரான ஒரு வகையான அச்சுறுத்தலாகும்.  மரண தண்டனை சதிகளிலிருந்து  பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் அஃப்சல் குரு அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில்  நாம் அனைவரும் இனைந்து போராடுவோம்.
அவர்களின் மரணத்திற்கு நாமும் சாட்சிகளாகி விடமால் அவர்களின் சுதந்திரத்திற்கு  நாம் சாட்சிகளாய்  இருப்போம்.  

-          ஒரு பயங்கரவாதியின் வாக்குமூலம்
-         
-          யாரோ விரித்த வலையில்
-          நான் விழுந்து
-          மாட்டி கொண்டதாய்
-          நினைக்கவில்லை.
-          வலைகளுக்கு உள்ளே தான்
-          எங்கள் வாழ்க்கை.
-         
-          நான் நேற்றைய பிணங்களுக்கும்
-          நாளைய பிணங்களுக்கும்
-          நடுவே.
-          இறைச்சிகான விளங்குகள்
-          நாங்கள்.
-         
-         
-          வெடித்து பயணித்த
-          குண்டுகளுக்கு அடைக்கலம் தந்தது
-          என் உடம்பு.
-          அது சுமந்த மருந்துகள்
-          என் துயரங்களுக்கு
-          நிரந்தர நிவாரணம் தருகிறது.
-         
-          உடம்புக்குள் அடைத்து வைத்த
-          இரத்தங்களுக்கு
-          உன் துப்பாக்கி குண்டுகளால்
-          விடுதலை.
-         
-          சுழன்று வந்த சுவாசம்
-          மூச்சு பையை தகர்த்து
-          அது பிறந்த
-          காற்று மண்டலத்தில்
-          கலக்கிறது.
-          வாங்கிய கடன்
-          முழுவதுமாய்
-          கொடுக்கப்படுகிறது.
-          நான் கடனுடன் மரணிக்க மாட்டேன்.
-         




-          உன் இராணுவ பூட்சால்
-          என் முகம் மண்ணுக்குள்
-          புதையும் வரை மிதிக்கிறாய்,
-         
-          வியர்வையின் உப்பை மட்டும்
-          சுவைத்த என் தோல்களில்
-          சிருநீர் கழிக்கின்றாய்,
-         
-          தன் மானம்
-          என பெயரிடப் பட்டதை
-          எல்லாம் அழித்து பொசுக்குகிறாய்.
-         
-          என்னை அவமான படுத்தியதாய்
-          மகிழ்ந்து கொள்!.
-         
-          எழும்புகளால் சதைகளையும்,
-          இரத்ததிற்கு உள்ளே உடம்பையும்
-          உரு மாற்றம் செய்கிறாய்.
-         
-          என்னை கிழித்து துண்டாட்டும்
-          உன் ஆயுதங்கள்!.
-         
-          தாங்க முடியாத வலிகளின்
-          கடைசி விளிம்பையும்
-          கடந்து விட்டேன்,
-          இனி வலிகள் இல்லா
-          முடிவற்ற பயணம்.
-         
-          உடம்பின் ஒவ்வொரு
-          தசைகளும் துடித்து
-          இறக்கட்டும்!.
-         
-          என் கடைசி அணுக்கள்
-          சாகும் வரை வேதனை கொடு!.
-         
-         
-          எனக்கு கல்லரை தோண்டும்முன்
-          நீ சாட்சிகளை உருவாக்கு,
-          நீ உருவாக்கிய
-          அடையாளத்திற்குள்
-          என்னை திணித்து விடு,
-         
-          சட்டங்கள் காத்திருக்கின்றது
-          எனக்கு பயங்கரவாதி என பெயரிட..
-         
-          என்னை கொன்று நீ சாந்தி அடைந்து கொள்!.
-          பதக்கங்களை பத்திரப்படுத்தி கொள்!
-         
-         
-       
   கடைசியாய் சில வேண்டுகோள்,
-          எனக்கு உருவம்
-          தந்தவளிடம் மட்டும்
-          இந்த சிதைந்த பிண்டம்
-          நீ தந்தது
-          என அறிமுகம் செய்யாதே.
-         
-          என் உயிர் விட்ட இந்த மண்ணிடம்
-          நான் ஒரு தேச துரோகி
-          என விளம்பரம் செய்யாதே...


0 comments: