சுதந்திர தாகம்


நாம் பிரகடனப்படுத்துகிறோம்!!!
நாம் எல்லா உரிமைகளும் உள்ள மனிதர்களாக மதிக்கப்படவேண்டும் என்று!
அதற்காக நாம் காத்திருக்கப் போவது
இல்லை!


இப்பொழுதே மனிதகுல விடுதலையை வென்றாக வேண்டும்!!

சாத்தியத்திற்குரிய எல்லா வழிகளிலும் சமுக விடுதலையை வென்றாக வேண்டும்.!!


அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்,
உன்னை தாக்க வருபவனை தகற்த்தெறி!,
மரணத்திடம் ஒப்படை!!!



சுதந்திரத்திரம் இல்லாத அமைதி
சாத்தியம் இல்லை!! ஏனென்றால்,
சுதந்திரம் கிடைக்காத வரை
ஒருவராலும் அமைதியாக இருக்க முடியாது!


-மால்கம் X




சட்டங்களில் விடுதலை இல்லை,
சமுக விடுதலை அடையாதவரை” -


-அண்ணல் அம்பேத்கர்


"தலித்துக்கள் இல்லாத
இஸ்லாமிய சமுக விடுதலையும்,
இஸ்லாமியர்கள் இல்லாத
தலித் சமுக விடுதலையும்
சாத்தியமில்லை! "


"இனி நாங்கள்!!!!


நாங்கள் மட்டுமே எஜமானர்கள்!!!


என்று வானத்தின் செவிப்பறை கிழிய பிரகடணம் செய்கிறோம்!!!


எந்த சுரண்டல் சாம்ராஜ்ஜியங்களில் நீங்கள் புரோகிதம் புரிந்தீர்களோ அந்த சாம்ராஜ்ஜியங்கள், பரிவாரங்கள், வேதங்கள், பஜனைகள் எல்லாம் இந்த யுகபிரளயத்தின் கந்தக அலைகளால் சாம்பலாகின்றன....நாங்கள் எழுகின்றோம்!!!!" ---- இன்குலாப்


ஆகவே வேண்டும் சமுக விடுதலைக்கான சுதந்திரம்!!! ....


Tuesday, August 9, 2011

கல் விளக்குகள்- என்.டி இராஜ்குமார் கவிதைகள்



ஒதுக்கி விட்ட தாடியும்
பட்டு மஞ்சல் குர்தாவும் போட்டுக் கொண்டு
சாதிச் சான்றிதழ் கேட்கப்போனால்
“ மகர பூஷனம் சொல்கிறான்,
உன் முகத்தைப் பார்த்தால்
அரிஜனனைப் போல தெரியவில்லை என்று.
இனி செரட்டையும் ஏந்தி
கூலிக்கு மொடஞ்ச ஓலப்பெட்டியுடன்
கோவணமும் கட்டிக் கொண்டு வந்தால் கிடைக்குமா சார் ?எனக் கேட்க,
திமிர் பிடித்தவனே என்று அவன் சொல்ல  
எனக்கும் அவனுக்கு நடக்கும் சண்டை யாராலும் பைசல் பண்ண முடியாமல் போகிறது.


என்.டி .இராஜ்குமார்

0 comments: