சுதந்திர தாகம்


நாம் பிரகடனப்படுத்துகிறோம்!!!
நாம் எல்லா உரிமைகளும் உள்ள மனிதர்களாக மதிக்கப்படவேண்டும் என்று!
அதற்காக நாம் காத்திருக்கப் போவது
இல்லை!


இப்பொழுதே மனிதகுல விடுதலையை வென்றாக வேண்டும்!!

சாத்தியத்திற்குரிய எல்லா வழிகளிலும் சமுக விடுதலையை வென்றாக வேண்டும்.!!


அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்,
உன்னை தாக்க வருபவனை தகற்த்தெறி!,
மரணத்திடம் ஒப்படை!!!



சுதந்திரத்திரம் இல்லாத அமைதி
சாத்தியம் இல்லை!! ஏனென்றால்,
சுதந்திரம் கிடைக்காத வரை
ஒருவராலும் அமைதியாக இருக்க முடியாது!


-மால்கம் X




சட்டங்களில் விடுதலை இல்லை,
சமுக விடுதலை அடையாதவரை” -


-அண்ணல் அம்பேத்கர்


"தலித்துக்கள் இல்லாத
இஸ்லாமிய சமுக விடுதலையும்,
இஸ்லாமியர்கள் இல்லாத
தலித் சமுக விடுதலையும்
சாத்தியமில்லை! "


"இனி நாங்கள்!!!!


நாங்கள் மட்டுமே எஜமானர்கள்!!!


என்று வானத்தின் செவிப்பறை கிழிய பிரகடணம் செய்கிறோம்!!!


எந்த சுரண்டல் சாம்ராஜ்ஜியங்களில் நீங்கள் புரோகிதம் புரிந்தீர்களோ அந்த சாம்ராஜ்ஜியங்கள், பரிவாரங்கள், வேதங்கள், பஜனைகள் எல்லாம் இந்த யுகபிரளயத்தின் கந்தக அலைகளால் சாம்பலாகின்றன....நாங்கள் எழுகின்றோம்!!!!" ---- இன்குலாப்


ஆகவே வேண்டும் சமுக விடுதலைக்கான சுதந்திரம்!!! ....


Wednesday, July 27, 2011

நார்வேயின் நரேந்திரமோடி 'பெர்விக்'

நார்வேயில் படுகொலையினை நடத்திய பெர்விக்கின் 1518 பக்க விளக்கப்புத்தகத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சுமார் 100 பக்கங்களை படித்தபோதே பகீர் என்கிறது...



இது ஏதோ ஒரு பைத்தியக்காரனின் செயல் என்று சொல்லிவிட்டு மேற்கத்திய ஊடகங்கள் வேறுவேலையைப்பார்க்கச்சென்றதன் பின்னிருக்கும் அரசியலை புறந்தள்ளிவிடமுடியாது...

என் கண்ணில்பட்டவை....
1 . இசுலாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் உலகைவிட்டே அனுப்ப வேண்டுமாம்.
2 . அவர்களை கொன்றுகுவிப்பவர்களுக்கு பரிசுத்தொகையும் கேடயங்களும் பரிசளிக்கப்படுமாம். (யார் யாரை எவ்வளவு எண்ணிக்கையில் கொன்றால் என்னென்ன பரிசுத்தொகையென்று மிக விரிவாக எழுதியிருக்கிறான்)
3 .இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் அல்லாதோரை கொல்லவோ/நாட்டைவிட்டு துரத்தவோ  இந்திய தேசியவாதிகளுக்கும் இவர்கள் உதவுவார்களாம்.
4 . கிராம்சி உட்பட பல மார்க்சிஸ்டுகள்தான் ஐரோப்பாவில் இன்று நிலவிவரும் சோசலிச சிந்தனைகளுக்கு காரணமென்று கடுமையாக விமர்சித்திருக்கிறான்.
5 . 'இந்தியா இந்துக்களுக்கு', 'ஐரோப்பா வெள்ளையனுக்கு',  என்று பல பக்கங்களில் எழுதியிருக்கிறான்.
6 . வெடிமருந்து தயாரிக்கப்பயன்படும் பெக்ரிக் அமிலம் தயாரிப்பதெப்படி என்கிற செய்முறைவிளக்கமும் உண்டு.
7. இதற்காக இராணுவமொன்றினை அமைக்கவேண்டுமென்றும்,  அது எவ்வாறு செயல்படவேண்டுமென்றும், உலகம் முழுக்க அதனை எவ்வாறு விரிவாக்கவேண்டுமென்றும் எழுதியிருக்கிறான்.
8. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால், இந்துக்கள் அவர்களின் நண்பர்களாம்.

இந்தியா குறித்து....

"'காவிமயமாக்கம்' என்பது இந்தியாவை இந்துநாடாக மாற்ற முனைகிற வலதுசாரி இந்து தேசியவாதிகளின் (இந்துத்துவா) கொள்கையாகும். ஐரோப்பாவைப்போல் இந்தியாவிலும் இந்து தேசியவாதிகளுக்கு இந்திய மார்க்சிஸ்டுகள்தான் பெரும்தலைவலி.


இடது சோசலிச கட்சிகளை உள்ளடக்கியதுதான் இந்தியாவை ஆள்கிற 'இந்திய தேசிய காங்கிரஸ்' தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி. இந்துகட்சிகளை உள்ளடக்கிய 'இந்து வலதுசாரி தேசியவாதம்' பேசும் பா.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சி) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் எதிர்க்கட்சி.

சிறுபான்மை இசுலாமியர்களை நம்பியும், காசு கொடுத்து கீழ்சாதி இந்துக்களை கிருத்துவர்களாக  மாற்றும் கிருத்துவ மிஷனரிகளை நம்பியும், இந்துத்துவ கலாச்சாரத்தை ஒழிக்க விரும்பும் கம்யூனிஸ்டுகளைக்கண்டு அஞ்சியுமே ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறது ஆளும் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவிலிருக்கும் இந்துக்களைவிட அயல்நாடுகளில் வாழும் இந்துக்கள்தான் இந்துகலாசாரம் மீது அதிகமான அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் இந்து வலதுசாரிகளிடத்தில் இருக்கிற ஆறுதலான ஒன்று..... இந்துதுவாவை அவமதிக்கப்படுகிறபோதெல்லாம்  அவ்வநீதிகளைப்பொறுத்துக்கொள்ளாமல் முஸ்லிம்களை தாக்குவது, கலகங்களை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான். ஆனால் இவைமட்டுமே போதாது. வெறும் முஸ்லிம்களை கொல்வதற்குப்பதிலாக ஒரு இராணுவ நடவடிக்கையின் மூலமாக தேசதுரோக தலைகளை கொன்று, மார்க்சிய கலாசார அரசினை தூக்கியெறிய வேண்டும்.
இதனைச்சரியாக செய்யாதவரை, இந்தியாவின் அழிவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஐரோப்பிய-இந்திய தேசிய இயக்கங்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஒத்துழைத்து செயல்படுவதும் இன்றியமையாதது. நம்மிருவரின் குறிக்கோளும் லட்சியமும் ஒன்றே!!!"

இப்படுகொலை எங்கேயோ மேற்கு ஐரோப்பாவிலிருக்கும் நோர்வே என்கிற நோபல் பரிசு கொடுக்கிற நாட்டில் நடந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல. இங்கிருக்கும் மோடிகளின், அத்வானிகளின் மச்சான்தான் இப்படுகொலையை நிகழ்த்திய பெரிக். இந்நிகழ்விலிருந்து உலகெங்கிலும் இருக்கும் இனவெறிக்கட்சிக்கட்சிகளெல்லாம் பாடம் படித்துக்கொண்டு, தன்னினவெறியினை கூர்மைப்படுத்திக்கொண்டு துப்பாக்கிகளுடனும் குண்டுகளுடனும் நம்முன்னே வந்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை.

நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...



நன்றி : முகநூல் நண்பர்கள்

0 comments: